ஈரான் மீது பொருளாதார தடை தேவை - அமெரிக்கா மீண்டும் கோரிக்கை

ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அமெரிக்கா வைத்த கோரிக்கை சட்ட விரோதமானது என்று ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையீத் கடிப்ஸடெ கூறியுள்ளார்
ஈரான் மீது பொருளாதார தடை தேவை - அமெரிக்கா மீண்டும் கோரிக்கை
x
ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அமெரிக்கா வைத்த கோரிக்கை சட்ட விரோதமானது என்று ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையீத் கடிப்ஸடெ கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் 15 உறுப்பினர்களில், 13 உறுப்பினர்கள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிக்கப் பட்டுள்ளது  இந்நிலையில், மீண்டும் ஐ.நா மூலம் உலக அளவில் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி, வியன்னாவில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தில் ஈரான் ஒப்பந்தத்தில், அதற்கு அளிக்கப்பட்ட உரிமைகளை நிலை நிறுத்த வாதாடும் என்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்படாமல், விலக்கு பெறும் என்று சையீத் கடிப்ஸடெ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்