சீனா: மலைப்பகுதியில் வளர்ந்த மிகப்பெரிய காளான்
சீனாவின் மாலன் மலைப்பகுதியில் மிகப்பெரிய காளான் வளர்ந்துள்ளது.
சீனாவின் மாலன் மலைப்பகுதியில் மிகப்பெரிய காளான் வளர்ந்துள்ளது. கால்பந்தை விட பெரிதாக வளர்ந்துள்ள அந்த காளான் 32 சென்டி மீட்டர் விட்டமும், 25 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. மலைப்பகுதியில் பொழிந்த மழையில் தானாக வளர்ந்த அந்த காளான் மருத்துவ குணம் மிக்க பூஞ்சை வகையை சேர்ந்தது என வனத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 55 சென்டி மீட்டர் விட்டமும், 35 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட மிகப்பெரிய காளான் வளர்ந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story

