சீனாவின் சினோவாக்ஸ் தடுப்பு மருந்து - ஒரு மாதத்திற்குள் போதிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் சினோவாக்ஸ் எனப்படும் தடுப்பு மருந்து, ஒரு மாதத்திற்குள் போதிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோவாக்ஸ் தடுப்பு மருந்து - ஒரு மாதத்திற்குள் போதிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
x
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், சீனாவில் பயோடெக் நிறுவனம் ஒன்று, புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதனை ஆயிரம் பேருக்கு செலுத்தி முதல் 2 சோதனைகளை வெற்றிகரமாகவும் நடத்தியுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரம் பேர்களில், 97 சதவீதம் பேருக்கு ஒரு மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள சிறு குறைபாடுகளையும் அகற்றி, 100 சதவீதம் பயன் தரும் வகையில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்