உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 04:32 PM
உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை தங்கள் நாடு கண்டுபிடித்து உள்ளதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள காமாலியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த சோதனை, அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என ரஷ்ய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது எனவும், தனது மகள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் தடுப்பூசியை அதிகளவில் தயாரிக்கும் பணியை ரஷ்யா தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.