பெய்ரூட் வெடி விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு - பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை

பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ரூட் வெடி விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு - பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை
x
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்து 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் திடீரென தீபிடித்து வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்தால் பெய்ரூம் உள்கட்டமைப்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் இன்னும் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை நீடிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், ரத்த தானம் செய்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 80 சதவீத உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையில், பெய்ரூட் துறைமுகம் மற்றும் கிடங்குகளில் வைக்கப்பட்டு இருந்த உணவுப் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாககும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் நிலைகுலைந்து போய் உள்ள லெபனான் பொருளாதாரம் மேலும் பாதிப்பை எதிர்க்கொள்ளும் என கூறப்படுகிறது. 


பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈபிள் கோபுர விளக்குகளை அணைத்து அஞ்சலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் நேற்று வழக்கமான நேரத்திற்கு, ஒரு மணி நேரம் முன்னதாகவே விளக்குகள் அணைக்கப்பட்டன.பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளக்குகள் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சேக்ரே சதுக்கத்தில், உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று பெய்ரூட் செல்கிறார். மீட்பு படையினர், மருந்து பொருட்கள், உபகரணங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை உள்ளிட்டவை 2 விமானங்களில் பெய்ரூட் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.





Next Story

மேலும் செய்திகள்