இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மும்முரம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மும்முரம்
x
196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.   அதிபர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அம்பாந்தோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.  மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் 2 மணிக்கு முதல்கட்ட தேர்தல் முடிவுகள் தெரிய தொடங்கும் எனவும்   நாளை காலை 6 மணிக்குள் முடிவுகள் முழுமையாக வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இலங்கையில் அடுத்த 7 நாட்களுக்கு ஊர்வலம் மற்றும் பேரணி நடத்த  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்