இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே இலங்கையில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
x
வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 69 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு போலீஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து விளக்கினார். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக இதுவரை 22 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர், வன்முறை சம்பவங்கள் நேர்ந்தால், துப்பாக்கிச்சூடு நடத்தவும் போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.


இலங்கையின் 9-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். இதனிடையே, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 508 வாக்குச்சாவடியில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் வாக்களிக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்