நாளை இலங்கை நாடாளுமன்ற தே​ர்தல் - இலங்கையில் திருப்ப​த்தை ஏற்படுத்துமா ஆகஸ்ட் 5?
பதிவு : ஆகஸ்ட் 04, 2020, 03:59 PM
உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் முட​ங்கி உள்ள நிலையில் இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முதல் முறை என்பதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. வழக்கமாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறையாகும். இந்நிலையில் அதிபர் கோட்டபய ராஜபக்சவால் கடந்த மார்ச் ஒன்றம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாளை  நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்து 682 பேரும், சுயேட்சைகள் மூவாயிரத்து 800 பேர் என மொத்தம் ஏழாயிரத்து 452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும், நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது. 
கொரோனா பரவல் காரணமாக பிரசார கூட்டங்கள், சுகாதார அமைச்சகத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடியில் உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் கை சுத்தம்  செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.விரலுக்கு மை பூசும்போதும் சுகாதார விதிமுறை பின்பற்றப்பட உள்ளது என்றும்,ஒருமீட்டர் இடைவெளி கடைபிடிப்பது, முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் வாக்களிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டு உள்ளது.  புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கை தேர்தல் கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து, இயல்பு நிலைக்கு உலக நாடுகள் திரும்ப  நல்ல வழிகாட்டுதலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

354 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

294 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

228 views

(13.08.2020) குற்ற சரித்திரம்

(13.08.2020) குற்ற சரித்திரம்

173 views

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

19 views

பிற செய்திகள்

ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு..! - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

நண்டு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

98 views

எல்லையில் பதற்றத்தை தணிக்க இன்று பேச்சுவார்த்தை- சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

22 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

228 views

டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் திடீர் அனுமதி

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.

339 views

மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

26 views

தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்

தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.