டிக் டாக் செயலியை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்? - "பெருமளவு தொகையை அரசுக்கு பங்காக, வழங்க வேண்டும்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

டிக் டாக் செயலியை, வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்க அரசு கருவூலத்திற்கு, பெரும் பங்கை தர வேண்டியது அவசியம் என, அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலியை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்? - பெருமளவு தொகையை அரசுக்கு பங்காக, வழங்க வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
x
சீன நிறுவனத்தின், டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 
செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை, விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். டிக்டாக் செயலி, சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், எனவே,   அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது எந்த, நிறுவனமோ பெறுவதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். அதே சமயம், நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கையின் போது, பெருமளவு தொகை அமெரிக்க அரசின் கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். 

----

Next Story

மேலும் செய்திகள்