கொரோனா கட்டுப்பாடு நீக்கக் கோரி பிரமாண்ட பேரணி - பெர்லினில் திரண்ட மக்கள்

ஜெர்மனியில் கொரோனாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு நீக்கக் கோரி பிரமாண்ட பேரணி - பெர்லினில் திரண்ட மக்கள்
x
ஜெர்மனியில் கொரோனாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளார். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, தலைநகர் பெர்னிலில் திரண்ட ஏராளமானோர், பேரணி சென்றனர். அப்போது கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இனவெறிக்கு எதிராக கனடாவில் பேரணி

விடுதலை நாளான நேற்று, இனவெறிக்கு எதிராக கனடாவின் டொரண்டோலிவ் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி நேற்று நடைபெற்றது. சமூக நீதி, குழந்தைகள் நலன், காவல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பாக பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கம் எழுப்பினர். இங்கிலாந்து பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளாக ஆகஸ்ட் முதல் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்