பயணிகள் விமானம் அருகே பறந்து வந்த இரண்டு போர் விமானங்கள்

ஈரான் பயணிகள் விமானம் அருகே இரண்டு போர் விமானங்கள் நெருங்கியதால் பயணிகள் அச்சமடைந்ததாக, ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐஎன்என் தெரிவித்துள்ளது.
பயணிகள் விமானம் அருகே பறந்து வந்த இரண்டு போர் விமானங்கள்
x
ஈரான் பயணிகள் விமானம் அருகே இரண்டு போர் விமானங்கள் நெருங்கியதால் பயணிகள் அச்சமடைந்ததாக, ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐஎன்என் தெரிவித்துள்ளது. சிரிய வான்வெளியில், இது நடந்ததாக கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்க கோரி இளைஞர்கள் போராட்டம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், நாடாளுமன்றத்தை கலைக்க வலியுறுத்தி ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதார சீர்கேடு உள்ளதாகவும் புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

"சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான உறவு அவசியம்"

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மை பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்கா - இந்தியா வர்த்தக கவுன்சில் உச்சிமாநாட்டில் பேசிய அவர்,  இரு நாடுகளும் வலுவான உறவுகளை வளர்ப்பது முக்கியம் என கூறினார்.  

நாஜி வதை முகாமில் கொலைகளுக்கு உதவிய காவலர்- 2 ஆண்டு சிறை

இரண்டாம் உலகப் போரின் போது, நாஜி வதை முகாமில் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்ய உதவிய நபருக்கு, 93 வயதில் ஜெர்மனி நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. 1944 ஆண்டு முதல்1945 ஆண்டு வரை ஒரு நாஜி வதை முகாமில், BRUNO என்ற ஜெர்மானியர், 5 ஆயிரத்து 232 கைதிகள், பல யூதர்களை கொலை செய்ய உதவிகரமாக இருந்துள்ளார்.

வடக்கு கலீசியா பகுதியில் காட்டுத்தீ

ஸ்பெயின் நாட்டின் , வடக்கு கலீசியா பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் எரிந்து மரங்கள் சேதமடைந்தன. காட்டுத்தீயை அணைக்கும் பணியில், 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக நெடு தூரம் கரும்புகை சூழ்ந்தது

சீனாவின் லாங் மார்ச் -5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சீனாவின் மிகப் பெரிய ஏவுகணையான லாங் மார்ச் -5 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஹைனானின் கடற்கரையில் உள்ள வென்சாங் விண்கல வெளியீட்டு தளத்திலிருந்து,  நேற்று ஏவப்பட்டது. சுமார் ஐந்து டன் எடையுடன் சென்ற லாங் மார்ச் -5 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்