பள்ளிவாசலாக மாற்றப்பட்ட பிரபல அருங்காட்சியகம்
துருக்கியின் இஸ்தான்புலில், அமைந்துள்ள மிக பிரபல அருங்காட்சியகமான ஹாகியா சோபியா, 24 ஆம் தேதி முதல் இஸ்லாமிய வழிப்பாட்டு தலமாக செயல்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புலில், அமைந்துள்ள மிக பிரபல அருங்காட்சியகமான ஹாகியா சோபியா, 24 ஆம் தேதி முதல் இஸ்லாமிய வழிப்பாட்டு தலமாக செயல்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிபர், தய்யிப் எர்டோகன், புனரமைக்கப்பட்ட, இஸ்லாமிய பள்ளிவாசலின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 9 வீரர்கள் பலி

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாய்வியார் மாகாணத்தில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதற்காக யூஎச்-60 ரக ஹெலிகாப்டரில் 17 வீரர்கள் புறப்பட்டு சென்றனர். ஹெலிகாப்டர் இனிரிடா என்ற ஆற்றுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது. இதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நவ நாகரீக ஆடைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி

இத்தாலியின் லீஸ் நகரில், கலாசாரம் மற்றும் உள்நாட்டு கைவினை பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நவநாகரீக ஆடைகள், அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள், அசத்தலான உடையணிந்து ஒய்யார நடை நடந்தனர்.
சவூதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு உடல்நலக்குறைவு

சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக்குறை காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான அவர், பித்தப்பை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி நிறுவனம்
ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
Next Story

