கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

3 மாதத்தில் பத்து லட்சம் டோஸ், கொரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டு வருவதாக சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்
x
கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட சோதனையில் நேர்மறையான முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், அதனை தயாரிக்க தேவையான அனுமதியை  இங்கிலாந்தின் மருந்து நிறுவனமான  அஸ்ட்ரா ஜெனிகாவிடம் இருந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துவங்க உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மிகப் பெரிய அளவில் தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், 3 மாதத்தில் பத்து லட்சம் தடுப்பு மருந்தை இந்தியாவில் விநியோகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்