"மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்

மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார்.
மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
x


மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார். அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மக்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். முக கவசம் அணிந்து தான் ஆக வேண்டும் என்ற உத்தரவை பிறபிக்க விரும்பவில்லை என்றும், முக கவசம் அணிந்தால் தொற்று ஏற்படாது என்பதில் தனக்கு நம்பிக்கை  இல்லை என்றும் டிரம்ப் கூறினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். 

இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் ஆறு லட்சத்தை நெருங்குகிறது" - உலக சுகாதார நிறுவனம் தகவல்



கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் ஆறு லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக கூறியுள்ளது. சனிக்கிழமை வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5 லட்சத்து 93 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 848 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 7 ஆயிரத்து 360 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. 

"கொண்டாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியுடன் நடந்த திருமணம்"  - திருமண கொண்டாட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த கொரோனா



கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியுடன் திருமணம் நடைபெற்றது.  அங்காராவில் நடைபெற்ற திருமணத்தில் சமூக இடைவெளியுடன் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு அழைப்பு விடுத்ததாக கூறிய மணமக்கள், தொற்று பரவலால், தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது நடக்கும் திருமணத்தில், 100 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறினர்.திருமணம் என்றால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு, விழாவிற்கு வரும் உறவினர்களை கட்டித்தழுவுவது, தங்களது பண்பாடு என்று கூறிய மணமக்கள் வீட்டார், கொரோனா அச்சத்தால், அந்த கலாச்சாரத்தை மாற்றி, தூரத்தில் நின்று வரவேற்பதாக தெரிவித்தனர். 

தாய்லாந்தில், அரசுக்கு எதிராக போராட்டம் - நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 



தாய்லாந்தில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு தடையை மீறி, 
தலைநகர் பாங்காக்கிnd, ஜனநாயக நினைவுச்சின்னம் அருகே கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மாற்றி விட்டு, ஆட்சியில் அமர்ந்த பிரதமரும்,முன்னாள் ராணுவத் தலைவருமான
பிரயுத் சான்-ஓச்சாவின் ஆட்சி  மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.இதனால், நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 



Next Story

மேலும் செய்திகள்