தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு

தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு
x
டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு 



தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சிக்கிய 82 பாகிஸ்தானியர்கள் - அட்டாரி - வாகா எல்லை வழியாக பாக். சென்றனர்



இந்தியாவில் சிக்கி தவித்த 82 பாகிஸ்தானியர்கள் , இன்று அட்டாரி - வாகா எல்லை வழியாக சொந்த நாடு சென்றனர். கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக கராச்சி, லாகூர் மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து 82 பேர் இந்தியா வந்திருந்தனர். அதன் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அவர்கள் இங்கேயே சிக்கி கொண்டனர். தற்போது சிறப்பு அனுமதி பெற்றவர்களால் மட்டுமே அட்டாரி - வாகா எல்லையை கடக்க முடிகிறது. இந்நிலையில் 82 பாகிஸ்தானியர்கள் அட்டாரி வாகா எல்லை வழியாக சொந்த நாடு சென்றடைந்தனர். 

சூரிய மறைவுக்கு பிறகு மாலையில் தெரியும் வால் நட்சத்திரம்



ஜூலை 11ஆம் தேதி, பகல் பொழுதில் எரிகற்கள் விழுவதை வெறும் கண்களால் பாக்கலாம் என நாசா கூறியுள்ளது. இதை நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் சூரியன் மறைந்த பிறகு அந்திப் பொழுதில், வால் நட்சத்திரம் விழுந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள நாசா, பூமிக்கு அருகில், பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை நியோவைஸ் என குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் வால் நட்சத்திரம் தெரிந்ததாக கூறிய நாசா, இது ஒரு நேச்சுரல் ஃபயர் ஒர்க் என குறிப்பிட்டுள்ளனர்.

நடிகை நயா ரிவேரா ஏரியில் மூழ்கி உயிரிழப்பு ?



பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரு ஏரியில் நடிகை நயா ரிவேராவும் , அவரது 4 வயது மகனும் நீந்தி கொண்டிருந்தனர். அப்போது நடிகை ரிவேரா திடீரென மாயமாகி உள்ளார், இதனையடுத்து அவரை ஏரியில் தேடும் பணி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்