(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
(09.07.2020) உலகச் செய்திகள்
x
நடிகர் ஜானி டெப் மீது மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார் - லண்டன் நீதிமன்றத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜர்



பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மனைவியை கொடுமைப் படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில்  நேரில் ஆஜரானார்.

ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் - அரசுக்கு எதிராக போராட்டம் 



கொரோனா தொற்றினை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், அரசு ஊரடங்கை மட்டும் நீட்டிப்பதாக செர்பியாவில் போராட்டம் வெடித்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் முன் கூடிய ஆதரவாளர்களுக்கும் போலிசுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு மூலம் போலீசார் விரட்டி அடித்ததுடன் 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 47 போலீசாருக்கும், போராட்டகாரர்கள்17 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மரங்களில் கூடுபோல தொங்கும் ஓட்டல் அறைகள் - விடுமுறையை கழிக்க புதுவகை குடில்கள்



கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தொழில் முடங்கியுள்ள நிலையில், பெல்ஜியத்தில் புதுவகையில் சுற்றுலா தொழிலை தொடங்கியுள்ளனர். மரங்களில் தொங்க விடப்பட்ட மூடப்பட்ட டென்ட்களில் ஓய்விடத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஓய்வு கால விடுமுறை கழிக்கலாம் என கூறுகின்றனர்.

கொரோனாவில் மீண்ட மகன் - இன்ப அதிர்ச்சிஅளித்த தாய்...



அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகனுக்கு, அவரது தாய் இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மகனின் நெருங்கிய தோழனை அழைத்து வந்து, நேரில் சந்திக்க வைக்க தாய் திட்டமிட்டார். இதனையடுத்து, கொரோனாவிலிருந்து மீண்ட மகன், தோழனை கண்டதும் ஆரத்தழுவி கொண்டகாட்சி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

தலை ஒட்டி பிறந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை - 18 மணி நேரம் வெற்றிகரமாக நடத்தி முடித்த மருத்துவர்கள்



இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில், தலை ஒட்டி பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு மருத்துவர்கள், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர். ஆப்பிரிக்காவை சேர்ந்த எர்வினா, ப்ரெஃபினா ஆகிய அந்த இரு இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் 8 ஆம் தேதி, சுமார் 18 மணி நேரம் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து 3 முறை அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெருவில் 3.12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கிட கோரிக்கை



பெருவில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில்,லிமா நகரில்,  உரிய பாதுகாப்பு கவசங்கள், உணவு, மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால், பெருமளவு பாதிக்கப்படுவதாக கூறி, சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுகாதாரத்துறையினர் மீது,  போலீசார், தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்