சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைடிங் செய்து அசத்தல்
பதிவு : ஜூலை 09, 2020, 10:00 AM
துருக்கி நாட்டை சேர்ந்த ஹசன் கவால் என்ற 29 வயது பாராகிளைட்டிங் வீரர், சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைட்டிங் செய்து அசத்தியுள்ளார்.
துருக்கி நாட்டை சேர்ந்த ஹசன் கவால் என்ற 29 வயது பாராகிளைட்டிங் வீரர், சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைட்டிங் செய்து அசத்தியுள்ளார். பாராகிளைடிங் மிகவும் பாதுகாப்பான ஒரு விளையாட்டு என்பதை நிரூபிக்கவே, தாம் இதை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

டால்பின் பூங்கா திறப்பு - கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில், டால்பின் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு பின் முதல்முதலாக திறக்கப்படும் சுற்றுலா மையமாக அமைந்துள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டால்பின்கள் உள்ள நிலையில், அவற்றை கணக்கெடுக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டல் சேவைகளில் நிகழும் மாற்றம்


கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் ஓட்டல் சேவைகளிலும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு ஓட்டலில் சமூக இடைவெளி கடைபிடிக்க புதிய முயற்சி எடுத்துள்ளனர். வாகனம் நிறுத்துமிடத்தில்  குடில்களை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இனி பேச முடியாதவர்களின் மொழியையும் புரிந்து கொள்ளலாம்


அமெரிக்காவில் பேசமுடியாதவர்கள் பயன்படுத்தும் சைகை மொழியை மற்றவர்கள் கேட்டு புரிந்துகொள்ள ஏதுவாக கையுறை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெருமளவு பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.

அடி வாங்கியே கின்னஸ் சாதனை படைத்த நபர்


அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 92 முறை ஈரமான பஞ்சால் முகத்தில் அடி வாங்கியது தான் இந்த வினோத கின்னஸ் சாதனை.

கரடியுடன் புகைப்படம் - நூலிழையில் தப்பிய இளம்பெண்


ரோமநோயாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையோரம் நடமாடிய கரடியுடன் புகைப்படம் எடுக்க சாவின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளார். மனிதர்கள் சில நேரங்களில் லைக்குகளுக்காகவும், கமெண்ட்டுகளுக்காகவும் தங்களையே இழந்து விடுகின்றனர்.

ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் - அரசுக்கு எதிராக போராட்டம்


கொரோனா தொற்றினை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், அரசு ஊரடங்கை மட்டும் நீட்டிப்பதாக செர்பியாவில் போராட்டம் வெடித்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் முன் கூடிய ஆதரவாளர்களுக்கும் போலிசுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு மூலம் போலீசார் விரட்டி அடித்ததுடன் 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 47 போலீசாருக்கும், போராட்டகாரர்கள்17 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மரங்களில் கூடுபோல தொங்கும் ஓட்டல் அறைகள்


கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தொழில் முடங்கியுள்ள நிலையில், பெல்ஜியத்தில் புதுவகையில் தொடங்கியுள்ளனர். மரங்களில் தொங்கவிடப்பட்ட மூடப்பட்ட டென்ட்களில் ஓய்விடத்தை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் ஓய்வுகால விடுமுறை கழிக்கலாம் என கூறுகின்றனர்.

"கொரோனா பாதிப்பு இன்னும் உச்ச கட்டத்தை எட்டவில்லை"


கொரோனா பாதிப்பு இன்னும் உச்ச கட்டத்தை எட்டவில்லை என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த டெட்ரோஸ், கொரோனா என்ற எதிரியை வீழ்த்த உலகளாவிய ஒற்றுமை தேவை என்றும், அசுர வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்.

டிரம்பின் முடிவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு


உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் துவக்கியதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் , ஜோ பிடன் தான் பதவிக்கு வந்தால் மீண்டும் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் சேரும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

378 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

207 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

56 views

பிற செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற எசல பெரகரா திருவிழா

இலங்கையில் எசல பெரகரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

13 views

2750 டன் வெடி பொருட்கள் வெடித்து விபத்து - 73 பேர் உயிரிழப்பு - 3,700 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

5738 views

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே இலங்கையில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

69 views

நாளை இலங்கை நாடாளுமன்ற தே​ர்தல் - இலங்கையில் திருப்ப​த்தை ஏற்படுத்துமா ஆகஸ்ட் 5?

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் முட​ங்கி உள்ள நிலையில் இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

385 views

விசா நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா

எச் -1 பி விசா நடைமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

148 views

டிக் டாக் செயலியை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்? - "பெருமளவு தொகையை அரசுக்கு பங்காக, வழங்க வேண்டும்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

டிக் டாக் செயலியை, வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்க அரசு கருவூலத்திற்கு, பெரும் பங்கை தர வேண்டியது அவசியம் என, அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.