காற்றின் வழியாக கொரோனா தொற்று பரவல் - 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கடிதம்

காற்றின் மூலம் கொரோனா பரவல் என்பதை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
காற்றின் வழியாக கொரோனா தொற்று பரவல் - 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கடிதம்
x
காற்றின் மூலம் கொரோனா பரவல் என்பதை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காற்றின் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் காற்றின் மூலம் கொரோனா பரவலை உறுதி செய்யும் வகையிலான பல ஆதாரங்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , தற்போது உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாற்றி அமைக்கவும் அவர்கள் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தி உள்ளனர். மனிதர்களின் வாயில் இருந்து வெளியேறும் எச்சில் துகள்களில் சில காற்றில் மிதக்கும் என்றும், அந்த காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்த கடிதத்தில் விஞ்ஞானிகள் எச்சரி​த்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள், காற்று, வெளிச்சம் வசதி இல்லாத இடங்கள் மற்றும் மூடப்பட்ட அறைகள் போன்றவற்றில் காற்றின் மூலம் இது பரவும் என்பதை நிராகரிக்க முடியாது என கூறியுள்ளது. இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், அதுவரை காற்றின் மூலம் பரவுகிறது என உறுதியாக சொல்ல இயலாது எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதிய நடைமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்