பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ , ஊரடங்கு அறிவித்த மாகாண ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார்.
பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி
x
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ , ஊரடங்கு அறிவித்த மாகாண ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார். இதுபோல, கொரோனா அச்சம் இன்றி முக கவசம் அணியாமல் அவர் வலம் வந்ததால், சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவரை கண்டித்த‌து. இந்த நிலையில், அவருக்கு திடீரென 100 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரும் தான் நலமுடன் இருப்பதாக அவர் கூறி வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரேசில் அதிபர் நலம் பெற உலக சுகாதார அமைப்பு விருப்பம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனோரா விரைவில் நலம் பெற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ், இது தொடர்பாக கூறுகையில், எந்தவொரு நாடும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை எனவும் எந்தவொரு நாடோ, தனி நபரோ பாதுகாப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், பிரேசில் அதிபர் பூரண குணமடைய வாழ்த்துவதாக டெட்ராஸ் குறிப்பிட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்த போலீசார்



கென்யாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, சுமார் 100 பேரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், இதை கண்டித்து, நைரோபியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்துக்காக அவர்கள் குவிந்தனர். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. 

"தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை அடிமைப்படுத்தி வருகிறது" - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்



பொருளாதார ரீதியாக மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் வேலையைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஆயிரத்து 236 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் அவர்கள்,  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர். புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதன் மூலம், தமிழர்களை அடிமைப்படுத்தும் வேலைகளை செய்ய உள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக பொருளாதார ரீதியில் அடிமைகளாக வைத்திருப்பதாகவும்  குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்