இருதரப்பு உறவை மேன்மேலும் மேம்படுத்த - பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் முடிவு

உலகளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள, எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி உரையாடலின் போது பகிர்ந்து கொண்டனர்.
இருதரப்பு உறவை மேன்மேலும் மேம்படுத்த - பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் முடிவு
x
உலகளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள, எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி உரையாடலின் போது பகிர்ந்து கொண்டனர். கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம், எதிர்கொள்ளப் போகும் சவால்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தையும் இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும், வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டுக்கான, இரு தரப்பு தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளை தொடர்வதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்