ஐ.நா சபையை வியக்க வைத்த தமிழக சிறுமி - இளவரசி டயானா பெயரில் விருது வழங்கி கவுரவிப்பு

ஒசூரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு இங்கிலாந்து அரசு இளவரசி டயானா பெயரில் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஐ.நா சபையை வியக்க வைத்த தமிழக சிறுமி - இளவரசி டயானா பெயரில் விருது வழங்கி கவுரவிப்பு
x
ஐக்கிய நாடுகள் சபையில்,  சமூகத்தில் பெண்களை முன்னெற்றமடைய செய்யும் செயல்திட்டங்களை ஐநா சபையில் கூறிக்கொண்டிருக்கிறார் அந்த சாதனை சிறுமி... சிறுமி பேசி முடித்த‌தும் கரவொலியால் அரங்கமே அதிர்கிறது. 


இப்படி பல நாட்டு அறிஞர்களும், மாணவர்களும் சூழ்ந்திருக்கும் ஐநா சபையை அதிர வைத்த இந்த சிறுமியின் பெயர் நிகாரிகா... சேலம் மாவட்டம் ஒசூர் தில்லை நகரை சேர்ந்த கோபிநாத், சிரிசா தம்பதியின் மூத்த மகள். 16 வயதேயாகும் நிகாரிகா, இத்தனை சிறிய வயதில் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய, மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களின் வாழ்வை மலர செய்துள்ளார். இதற்காக ஹோப் வேர்ல்டு என்கிற செயல்திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளார் நிகாரிகா.

இந்த செயல்திட்டத்தை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி  ஐக்கியநாடுகள் சபையிலும் தெரிவித்து பல நாட்டு அறிஞர்களையும் வியப்படைய செய்துள்ளார் நிகாரிகா 

ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மறைந்த இளவரசி டயானாவின் பெயரில் விருது வழங்கும் பிரிட்டிஷ் அரசாங்கம், மாணவி நிகாரிகாவின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு டயானா விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்