உலகளவில் 1 கோடியை நெருங்கும் கொரோனா - அமெரிக்காவில் மீண்டும் அசுர வேகத்தில் நோய் பாதிப்பு

உலகளவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.
உலகளவில் 1 கோடியை நெருங்கும் கொரோனா - அமெரிக்காவில் மீண்டும் அசுர வேகத்தில் நோய் பாதிப்பு
x
உலகளவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது. அசுர வேகத்தில் பரவி வரும் இந்த தொற்றால் இதுவரை உலகளவில் 4 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 53 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் நோய் பாதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் ஒரே  நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்