2,000 முதல் 3,000 ராணுவ வீரர்களை கொன்றதாக கருத்து - கருணா அம்மானிடம் 7 மணி நேரம் விசாரணை

மூவாயிரம் ராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பாக, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானிடம், அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
2,000 முதல் 3,000 ராணுவ வீரர்களை கொன்றதாக கருத்து - கருணா அம்மானிடம்  7 மணி நேரம் விசாரணை
x
மூவாயிரம் ராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பாக, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானிடம், அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அம்பாறை பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு புலனாய்வு பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அவரது கருத்து தொடர்பாக போலீஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். தான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும்,  ஆனையிறவில், ஒரு இரவில் இரண்டு முதல் மூவராயிரம் ராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.அவரின் கருத்து இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்