கொரோனா பரவல் குறித்து விவாதம் செய்தபோது விபத்து - பாக். விமானத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம்

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த விமான விபத்துக்கு விமான ஓட்டிகளே காரணம் என அந்நாட்டு விமானத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பரவல் குறித்து விவாதம் செய்தபோது விபத்து - பாக். விமானத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம்
x
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த விமான விபத்துக்கு  விமான ஓட்டிகளே காரணம் என அந்நாட்டு விமானத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மே-22ம் தேதி கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர், பைலட் மற்றம் கோ-பைலட் இருவரும் கொரோனா பரவல் மற்றும் தாக்கம் குறித்து விவாதித்தபடி இருந்ததாகவும், இறங்கும் தருவாயில் கவனக் குறைவாக செயல்பட்டதால், விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்