கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகளவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
உலகளவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 95 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 24 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுப்பதும், உயிர்களை காப்பதும் நமது பொறுப்பு என, அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்