இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை - அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை - அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை
x
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, இந்திய பொருட்களுக்கு அளித்து வந்த ஏற்றுமதி சலுகையை அமெரிக்கா நிறுத்தியது.

* இந்த நிலையில், தற்போது அந்த சலுகையை இந்தியாவுக்கு திரும்ப அளிப்பதற்காக அமெரிக்கா  பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, அமெரிக்கா பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் கூறுகையில், இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தப்படுவதாகவும், தாராள வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ஆப்பிள், பாதாம், பருப்பு வகைகளுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்