"ராணுவத்தில் தொழில்நுட்பத்தை நம்பியுள்ள சீனா" - "போர் திறனில் மதிநுட்பம் மிகுந்த இந்திய ராணுவம்"

இந்தியா மற்றும் சீனா ராணுவத்திற்கு இடையே, மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்களிடம் உள்ள நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டு காண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ராணுவத்தில் தொழில்நுட்பத்தை நம்பியுள்ள சீனா - போர் திறனில் மதிநுட்பம் மிகுந்த இந்திய ராணுவம்
x
எல்லையில் இந்தியா - சீனா போர் பதற்றம் தொடங்கிய நிலையில், இருநாட்டு ராணுவ பலம் குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுத விஞ்ஞானிகள் பல தகவல்களை செய்திகளாக வெளியிட்டுள்ளனர். அதில், சீனாவிடம் 2 லட்சத்து 4 ஆயிரம் வீரர்கள் இருப்பதாகவும், இந்தியாவிடம் 2 லட்சத்து 25 ஆயிரம் வீரர்கள் இருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. வான்படையில் சீனாவிடம் 157 போர் விமானங்களும், இந்தியாவிடம் 270 போர் விமானங்களும் உள்ளன. சீனாவிடம் 140 அணு ஆயுத ஏவுகணைகள் இருப்பதாக கூறியுள்ள அவர்கள், இது இந்தியாவிடம் இருக்கும் ஏவுகணைகளை விட அதிகம் என தெரிவித்துள்ளனர். சீனாவை விட இந்தியா  தரைப்படையில் வலுவாக இருப்பதாவும், ஆனால் சீனா தொழில்நுட்பங்களையே அதிகம் நம்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டாளும், அதை இந்தியா, மதி நுட்பத்தோடு எதிர்கொள்ளும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் 10 அக்னி III ஏவுகணைகள், அணு குண்டுகளை தாங்கிச்சென்று தாக்கும் 51 ஏவுகணைகள்,மற்றும் 8 அக்னி II ஏவுகணைகள் இருக்கின்றன. இதில், 10 அக்னி III, பாகிஸ்தான் மற்றும் சீனப்பகுதிகளை நோக்கி தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அக்னி II, சீனாவின் மத்திய பகுதியை கண்காணித்து வருவதாகவும், மிரஸ் 51 ஏவுகணை, திபெத்தையொட்டிய பகுதிகளில் வட்டமடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவை எந்த நேரமும் திபெத்தில் இருந்து, சீனப்பகுதிக்கு செல்ல தயார் நிலையில் இருப்பதாவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சீனா ராணுவத்தை பொருத்தவரை, அணு ஆயுத ஏவுகனை தாக்குதலுக்கு, அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையம் உத்தரவிட்ட பிறகே தாக்குதல் நடத்தும். சீனாவில் அணு ஆயுத ஏவுகணை, கடல் எல்லைப்பகுதிகளில் சுற்றி வரும் நிலையில், அது ஒரு இடத்தில் மட்டும் நிற்ககூடியதல்ல. சீனாவில் 140 ஏவுகணைகளில் சில, தரையில் இருந்து இந்தியாவை நோக்கி குறி வைத்துள்ளதாகவும் என்றும்,குறிப்பாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை தாக்க தயாராக இருக்கும் என கூறியுள்ளனர். இது தவிர டெல்லி மற்றும் வடமேற்கு பகுதிகள், சாலைகளில் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனா ராணுவம், அணு ஆயுத பலத்தில் வலிமை பெற்று இருந்தாலும், இந்திய ராணுவத்தின் போர் மதி நுட்பம் வலிமையானது என அணு ஆயுத விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்