சுட்கி"யை ஏமாற்றினாரா சோட்டா பீம்? - ட்விட்டரில் பிரபலமாகும் ஜஸ்டிஸ் ஃபார் சுட்கி...
பதிவு : ஜூன் 06, 2020, 04:55 PM
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் கதி கலங்கி போயிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் கார்ட்டூன் கதா பாத்திரத்தின் திருமணம் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.
குழந்தைகளின் உலகத்தில் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கதாபாத்திரம் என்றால் அதுதான் சோட்டா பீம்...2008ஆம் ஆண்டு தொடங்கி போகோ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது சோட்டா பீம் கார்ட்டூன். இந்த கார்ட்டூன் வரிசையில் டோலக் பூர் என்ற கற்பனை ஊரும் அதற்கு இந்திர வர்மா என்ற ராஜாவும் அவருக்கு இந்துமதி என்கிற இளவரசியும் இடம் பெற்றிருப்பார்கள். டோலக் பூருக்கு வரும் ஆபத்துகளை சோட்டா பீம் தன் சகாக்களுடன் முறியடிப்பார். இந்தக் கதையில் சோட்டா பீமுக்கு ஒரு பெண் தோழியும் உண்டு. அவள்தான் சுட்கி. டோலக் பூரில் லட்டு கடை வைத்திருக்கும் பெண்ணின் மகளான சுட்கி, தன் தோழன் பீமுக்காக அடிக்கடி லட்டுக்களை எடுத்து வந்து கொடுப்பாள். அந்த லட்டுக்கள்தான் பீமுக்கு சக்தி அளிக்கும் மருந்து. அதை வாயில் போட்ட உடன் பீம் எதிரிகளை பந்தாடுவார். இப்படிப்பட்ட கதையில் மிகச் சமீபத்தில் ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது. அண்மையில் ஒளிபரப்ப பட்ட சோட்டா பீம் எபிசோடில் பீம் சுட்கியை விட்டுவிட்டு ராஜகுமாரி இந்துமதியோடு குதிரையில் ஏறிப் போனதாக தெரிகிறது. உடனே சோட்டா பீம் இளவரசி இந்துமதியை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி தீயாய் பரவியது. அவ்வளவுதான் சுட்கியின் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். இத்தனை நாளாக சுட்கியிடம் லட்டு வாங்கி தின்றுவிட்டு, இப்போது இளவரசியை திருமணம் செய்து கொண்டால் சுட்கி மனம் என்ன பாடு படும் என இணையத்தில் கதறிவிட்டார்கள் கதறி. இந்த கார்ட்டூனுக்கு கதை எழுதும் நிறுவனமே உன் முடிவை மாற்று என்ற ரேஞ்சுக்கு சிலர் இணையத்தில் போராட்டத்தையே தொடங்கி விட்டார்கள். சுட்கிக்கு நியாயம் வேண்டும் என்ற அர்த்தத்தில் Justice For Chutki என்ற பெயரில் ஒரு ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. சுட்கியை ஏமாற்றியதற்காக விதவிதமாக மீம்ஸ் போட்டு சோட்டா பீமை கலாய்த்து விட்டார்கள். இந்த டிரெண்டிங்கின் தீவிரத்தை உணர்ந்து சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் நிறுவனம் அறிகை ஒன்ரை வெளியிட்டது. அதில், சோட்டா பீம் உட்பட இந்த கார்டூனில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் குழந்தைகளே. அவர்கள் யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனக் கூறப்பட்டிருக்கிறது. எங்களுக்குள் ஒன்றும் இல்லை நாங்கள் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்ற அறிவிப்பை கார்ட்டூன் கேரக்டர்கள் கூட சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் அதுதாங்க இந்தியா..!

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

475 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

115 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

52 views

பிற செய்திகள்

கொரோனா பரவலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்

கொரோனா தொற்று பரவாலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

49 views

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை - "2 மணி நேர காரசார பேச்சில் நடந்தது என்ன...?"

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே 2 மணி நேரம் அனல் பறக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

43 views

வயலின் இசையால் உற்சாகமூட்டும் செவிலியர்

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் பணி களைப்பை போக்குவதற்காக வயலின் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுகிறார்.

17 views

துருக்கியின் காலிபோலி பகுதியில் பயங்கர காட்டுத் தீ - காடுகளையொட்டிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காலிபோலி என்ற இடத்தில் நேற்று காட்டுத் தீ வேகமாக பரவியது.

17 views

உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்

தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

226 views

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1541 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.