இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...
பதிவு : ஜூன் 06, 2020, 04:04 PM
இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை மே 5ஆம் தேதி, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. 250-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள்  பங்காங் சோ என்ற இடத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 

மே 9 ஆம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் பலமுறை வரம்பு மீறல் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனைத்  தொடர்ந்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் நடவடிக்கைக்கு  பதில் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாக ஜூன் 3 ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது இருநாடுகள் இடையிலான எல்லைப் பிரச்சனை இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் மட்டத்தில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆக்கபூர்வ முறையில் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண  இதில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லடாக் பகுதிக்கு அருகே உள்ள சீனாவின் மோல்டோ என்கிற பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இந்தியாவின் சார்பாக 14 வது படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் தெற்கு ஜின்சியாங் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியூ லின் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2108 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

474 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

281 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

113 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

"தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை" - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2 views

"20 வீரர்கள் உயிரிழந்த நிலையிலும் சீனா, குஜராத் வர்த்தகம் பாதிப்பில்லை" - பா.ஜ.க. மீது காங்கிரஸ் சாடல்

நாட்டின் சீன முதலீட்டின் மையமாக குஜராத் மாநிலம் விளங்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

64 views

சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை

கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

144 views

ஏல தோட்ட விவசாயிகளுக்கு இ- பாஸ் பெறுவதில் சிக்கல் : நிபந்தனைகளை விதித்தது இடுக்கி மாவட்ட நிர்வாகம்

ஏலத்தோட்ட விவசாயிகள் கேரளாவில் உள்ள தங்களின் தோட்டத்திற்கு சென்று வர இ பாஸ் பெறுவதற்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது .

18 views

24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

20 views

எஸ் பேங்க் முறைகேடு வழக்கு - லண்டனில் உள்ள ராணா கபூர் சொத்தை முடக்க முடிவு

ராணா கபூர் காலத்தில் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடனாக மாறியுள்ளதாகவும், சுமார் 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் பணத்தை, 100 shell கம்பெனிகள் மூலம் ராணா கபூர் குடும்பத்தினர் முறைகேடாக சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.