இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
x
இன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக உலகையே வீட்டுக்குள் முடக்கிவிட்டது கொரோனா. இந்த ஊரடங்கு கொரோனாவைக் குறைத்ததோ இல்லையோ... காற்று மற்றும் தண்ணீர் மாசடைவதை ரொம்பவே குறைத்திருக்கிறது. கொரோனா முதன் முதலில் மையம் கொண்ட சீனாவில் காற்றின் கார்பன் அளவு 25 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகின் மிக மாசடைந்த தலைநகரம் எனப் பெயர் வாங்கிய நம் டெல்லி கூட இந்த லாக்டவுனில் பளிச்சென மாறியது.மக்கள் நெருக்கடியாலும் ஈமச் சடங்குகளாலும் மிகவும் அழுக்காகிக் கிடந்த கங்கை நீர் இப்போது அள்ளிக் குடிக்கும் அளவுக்கு பரிசுத்தமாகியிருக்கிறது.

கொரோனாவில் இத்தாலி அதிக உயிர்களை இழந்திருக்கலாம். ஆனால், ரோம் நகர கால்வாய்களில் மீன்களையும் டால்பினையும் பார்க்கும் அளவுக்கு தெளிவான தண்ணீர் ஓடக் காரணம், அதே கொரோனா ஊரடங்குதான். மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கியதால் வன விலங்குகள் வீதிக்கு வந்து இயற்கையின் பேராதிக்கத்தை உலகம் முழுவதும் பரைசாற்றின.

ஆனால் இப்படியெல்லாம் சுற்றுச்சூழல் வலுப்பெற்றிருப்பது தற்காலிகம்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மீண்டும் மனிதர்கள் வழக்கம் போல இயங்கினால் இயற்கையும் வழக்கம் போல துயரப்பட தொடங்கி விடும். அதுவரை கொரோனா தந்திருக்கும் இந்த அரிய காட்சிகளை ரசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

Next Story

மேலும் செய்திகள்