அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு

முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.
அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு
x
முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார். அது பற்றிய சிறு தொகுப்பை தற்போது பார்க்கலாம்

இவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த Mark Rober. நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றிய பொறியாளர். கொரோனா தந்த தனிமையைப் போக்க இவர் தன் வீட்டின் முன்புறம் பறவைகளுக்கு உணவிடுவதற்காக Bird Feeder வாங்கி வைத்திருக்கிறார். ஆனால், பறவைகளுக்காக வைத்த உணவை எல்லாம் விஷமக்கார அணில்கள் திருடி விட்டன. எவ்வளவு பாதுகாப்பான Bird Feeder வாங்கி வைத்தாலும் இதுதான் கதை. 

இவ்வளவு புத்திசாலிகளாக அணில்கள் இருப்பதால் அணிலை வைத்து ஒரு சவால் விளையாட்டு விளையாட மார்க் முடிவு செய்தார். இதன்படி அணில்களால் ஏறவே முடியாத கம்பிகள் கொண்டு ஸ்டாண்டுகள் அமைத்து அதில் ஒரு சர்க்கஸ் சாகச செட்டப்பையே உருவாக்கிவிட்டார். இதில் ஒரே ஒரு கம்பியின் மூலமாகத்தான் அணில்களால் ஏறி வர முடியும். அதில் ஏறி வந்தால், மிக கடினமான நூல் ஏணி மூலம் பயணித்து அடுத்த கட்டம் வர வேண்டும். அதன் பிறகு எந்தப் பக்கம் சரியான வழி என்பது தெரியாத புதிர் விளையாட்டு. முன்னேற விடாமல் சுழன்று தடுக்கும் கருவி. அணில்களின் கவனம் ஈர்க்கும் ஒரு பொம்மை. அதன் அருகே போய் நின்றால் அப்படியே கவிழ்த்துவிடும் சென்சார் அமைப்பு... கடப்பதற்கு கடினமான ஸ்ப்ரிங் பாலம். தாவி தாவி தாண்ட வேண்டிய மரப் பலகைகள்... இவை யாவையும் கடந்து வந்தால் அந்த அணிலை தூக்கி வீசும் மற்றொரு சென்சார் அமைப்பு. இவ்வளவு சவால்களையும் வெற்றி கொண்ட பிறகு அணில்கள் முன்னால் கொட்டும் ஜாக்பாட் பரிசு. 

நாசா ரேஞ்சில் இருக்கும் தன் அறிவை அணில்களுக்காக செலவிட்டு இந்த செட்டப்பை உருவாக்கி இருக்கிறார் மார்க். இந்த சவால்களையும் விடா முயற்சியோடு போராடி ஜெயித்த அணில்களை என்னவென்று பாராட்டுவது?

Next Story

மேலும் செய்திகள்