இன்று உலக மிதிவண்டி தினம்

இன்று உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது
இன்று உலக மிதிவண்டி தினம்
x
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை உலக மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இருந்தது மிதி வண்டி. ஒரு மிதி வண்டி திருடப்படுவதால் ஒரு குடும்பமே வாழ்வை இழப்பதைச் சொல்லும் உலகப் படம் இன்று வரையில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


எண்பதுகளின் குழந்தைகள் பலருக்கும் வாழ்க்கை லட்சியம் ஒரு சைக்கிள் வாங்குவதாகத்தான் இருந்திருக்கும். சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தால் அப்போதெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று அர்த்தம். தொண்ணூறுகளின் இறுதி வரையிலும் கூட இளைஞர்களின் பெருமைக்குரிய ஸ்டைல் அடையாளமாக இருந்தது மிதிவண்டி. 

காலப் போக்கில் மோட்டார் சைக்கிளின் புழக்கத்தால் மிதிவண்டி தன் செல்வாக்கை இழந்தது. ஆனால், அண்மைக் காலத்தில், உடலினை உறுதி செய்யும் கருவியாக மீண்டும் செல்வாக்கு பெற்று வருகிறது மிதிவண்டி. ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் கூட சைக்கிளிங் பயிற்சியை ஆர்வத்தோடு மேற்கொள்கிறார்கள். சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று உலகத்தின் பொதுப் போக்குவரத்து அனைத்தையும் முடக்கிய போது, சைக்கிள்தான் கை கொடுத்தது. ஐரோப்பாவில் மட்டும் இந்தக் காலகட்டத்தில் மிதிவண்டி பயன்பாடு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் நோய்வாய்ப்பட்ட தந்தையை மிதிவண்டியில் அமரச்செய்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற சோக வரலாறும் அண்மையில் எழுதப்பட்டது. உலகம் முழுக்க வருடத்துக்கு 10 கோடி மிதிவண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 90 கோடி லிட்டர் எரிபொருளை சேமிக்க இந்த  மிதிவண்டிகள் உதவுகின்றன என்றால் இயற்கைக்கு கைமாறாக இதைவிட என்ன செய்துவிட முடியும்?

சுற்றுச் சூழலுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் வளர்ந்த நாடுகளில் மிதிவண்டிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃப்ரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் தங்கள் தலைநகரங்களில் மிதிவண்டிகளுக்கான பிரத்யேக பாதையை அதிகரித்துள்ளன. ஆனால், நமது நாட்டில் 40 சதவீதமான வீடுகளில் மிதிவண்டிகள் இருந்தும் அவை பயன்படுத்தப்படுவதில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே மட்டும் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்கப்படுத்தினால் 1.8 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வு.

Next Story

மேலும் செய்திகள்