கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை : அடுத்த வாரத்திலிருந்து நோயாளிகளுக்கு விநியோகம்

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை : அடுத்த வாரத்திலிருந்து நோயாளிகளுக்கு விநியோகம்
x
கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனாவுக்கு  "அவிஃபாவிர்"(Avifavir) என்ற மாத்திரையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. இந்த மாத்திரை வருகின்ற ஜூன் 11ஆம் தேதி முதல் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபைராவிர் (Favipiravir) மாத்திரையில் சில மாற்றங்கள் செய்து இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. இதே மாத்திரையை கொண்டு தான் அவிகன் (Avigan) என்ற பெயரில் ஜப்பானும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதமே கொரோனாவுக்கு மாத்திரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அவிஃபாவிர் மாத்திரையை சுமார் 330 நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் நான்கு நாட்களில் குணமடைந்தாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழலில், ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் நோயாளிகளுக்கு தேவையான மாத்திரைகளை தயாரிக்க முடியும் என்று ரஷ்ய மாத்திரை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்