கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்
பதிவு : ஜூன் 02, 2020, 05:43 PM
மாற்றம் : ஜூன் 02, 2020, 05:47 PM
கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாசமான விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.
எட்டு வயது சுட்டியின் அட்டகாச சமையல்...

கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் சமையல் நிபுணர்களாக மாறியது நமக்குத் தெரியும். அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறாள் இந்த 8 வயது குட்டிப் பெண். மியான்மர் நாட்டைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் பெயர் Moe Myint May Thu. ஹோம் வொர்க் எழுதவே தடுமாறக் கூடிய இந்த பிஞ்சுக் கைகளால் ஒரு ஊருக்கே இந்தக் குழந்தை சமைப்பதும், கச்சிதமான அளவில் காரம் உப்பை எடுத்துப் போடுவதும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.


பவுன்டரி நோக்கி ஓடும் மனிதப்பந்து...

ரூம் போட்டு யோசிப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் டிக் டாக் வீடியோக்களில் ஒன்று இது. கிராமத்து கிரிக்கெட்டில் ஒரு வீரரையே பந்தாக்கி அடித்தால் அவர் யார் கையிலும் சிக்காமல் வளைந்து நெளிந்து பவுண்டரிக்கு ஓடிவிடுவார் தானே?


அரை டவுசர் கிரிக்கெட்டில் "ரீப்ளே"...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் இப்போதைக்கு நடப்பது மாதிரி தெரியவில்லை. அதனால்தான், சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயர் முடிவை மறு பரீசலனை செய்யும் ரீ ப்ளே தொழில்நுட்பத்தை எல்லாம் வெறும் கைகளில் காட்டுகிறார்கள் இந்த இளைஞர்கள். இந்திய அணி வீரர்களான அஷ்வின், வ்ருத்திமான் சாகா போன்றவர்கள் கூட கமென்ட் போட்டு ரசித்த வீடியோ இது.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - சிறப்பு விமானங்கள் மூலம் 325 பேர் வருகை

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 பேர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.

264 views

கொரோனா நோயாளி தப்பியோட்டம் : "மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்"

கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.

126 views

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

22 views

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

81 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

29 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

191 views

தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு

தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

23 views

(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

24 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

583 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.