போலீஸ் காவலில் கருப்பின நபர் உயிரிழப்பு : அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பரவிய போராட்டம்

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை கண்டித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
போலீஸ் காவலில் கருப்பின நபர் உயிரிழப்பு : அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பரவிய போராட்டம்
x
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். 

இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்  லாஸ் ஏஞ்சல்ஸ், உடா, கலிபோர்னியா உள்ளிட்ட 40 இடங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன .

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது. போராட்டக்காரர்களை விரட்ட போலீசார், கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். கடைகளும் கற்கள் வீசி சூறையாடப்பட்டன.


போலீசார் வெளியேற்ற முயன்றதால் வன்முறை வெடித்தது. போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. 


ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜ் இறந்த போது அங்கே இருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்