ஆபத்தான விலங்குகளோடு "பழகும்" மனிதர்கள்...

ஆபத்தான விலங்குகளை மனிதர்கள் மிகத் திறமையாக கையாளும் காணொலிகள் சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ஆபத்தான விலங்குகளோடு பழகும் மனிதர்கள்...
x
பாம்பை குளிப்பாட்டிய தைரியசாலி...

பாம்புக்கு பால் வார்ப்பவர்கள் கூட நிறைய பேர் உண்டு. ஆனால், ஒரு கொடிய விஷப்பாம்புக்கு இப்படி யாராவது தலைக்கு ஊற்றி விடுவார்களா? சின்ன 
கேரளாவில் கிட்டத்தட்ட 8 அடி நீளமுள்ள ராஜ நாகப் பாம்பு பிடிப்பட்டிருக்கிறது. அதைப் பிடித்த பாம்பு பிடி நிபுணர் ஒருவர்தான். அதனோடு இப்படி திக்திக் விளையாட்டு விளையாடியிருக்கிறார். மனிதனுக்கும் பாம்புக்கும் இடையே உள்ள உறவைப் பாருங்கள் என இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி Susanta Nanda பகிர்ந்திருந்தார். ஆனால் இதைப் பகிராதீர்கள். இதைப் பார்த்துவிட்டு யாராவது ராஜ நாகத்துடன் இப்படி பழக நினைத்து ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள் என அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்த அளவுக்கு இந்த வீடியோ கதி கலங்க வைக்கிறது.

பாம்பை தரதரவென இழுத்துப் போன பாட்டி...

இவராவது பரவாயில்லை... பாம்பு பிடி நிபுணர். இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்தில், ஒரு சாதாரண பாட்டி, படிக்காத பையனை ஸ்கூலுக்கு இழுத்துப் போவது போல, நல்ல பாம்பை தரதரவென இழுத்துப் போய் தூரத்தில் தூக்கி எறிகிறார். இதுவும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் பதற்றமான காட்சிதான்.

கரடியிடம் இருந்து தப்பித்த சிறுவனின் துணிச்சல்

இத்தாலியில் ஒரு 12 வயது சிறுவன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது பின்னால் கரடி வந்துவிட்டது. ஆனால், கொஞ்சமும் பதட்டப்படாமல் இயல்பாகவும் மெதுவாகவும் நடந்து பாதுகாப்பான இடத்துக்கு அந்தப் பையன் வந்த காட்சி இணையத்தில் பீதியைக் கிளப்பி வருகிறது. உண்மையில் கரடி போன்ற விலங்குகள் ஓடினால் துரத்தக் கூடியவை. அவற்றிடம் இருந்து தப்பிக்க இதுவே சரியான வழி என்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்