இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்
x
இலங்கையில் உள்ள மலையக தமிழ் மக்களின் தலைவர்களில் செல்வாக்கு மிக்கவர், ஆறுமுகன் தொண்டமான்.

மத்திய அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார்.

1964 ல் பிறந்த ஆறுமுகன் தொண்டமான் 
1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.  

அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களிலும் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

15 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சராகவும் இருந்துள்ள ஆறுமுகன் தொண்டமான் ,இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.

தொண்டமான் உயிரிழந்த செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், அரசியல் பிரமுகர்கள் என பலரும் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

 தொண்டமானின் உடல்  அவரது சொந்த ஊரான நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

வரும்  29ம் தேதி நுவரெலியா - நோர்வூட் மைதானத்தில் , ஆறுமுகன் தொண்டமானின் உடல் தகனம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்