எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.
எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...
x
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் தவித்து வரும் சீனர்கள் நாடு திரும்ப அந்நாடு, சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தூதரக இணையதளத்தில், நாடு   திரும்ப விரும்பும் சீனர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் ஜூன் 2  முதல், சீனாவின் பல மாகாணங்களுக்கு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே, சீனாவின் இந்த முடிவு அரசியல் ரீதியானது என கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அணி திரண்டன. கொரோனா தொற்று செயற்கையாக உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாகவும், அதற்கு சீனா தான் காரணம் எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று  ஆஸ்திரேலியா அந்நாட்டுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது இருநாடுகள் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்த தொடங்கியது என கூறப்படுகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கையும் உறவில் மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது. இந்நிலையில், லடாக்கில் சர்வதேச எல்லைக் கோட்டு அருகே சீனா துருப்புகளை குவித்துள்ளது. சீன ராணுவ வாகனங்கள் நடமாட்டமும் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ தளபதி நரவானே அங்கு நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்தியாவும் வீரர்களை குவிக்கத் தொடங்கியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த பின்னணியில் தான் சீனாவின் நேற்றைய அறிவிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்