கொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம்" - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு

கொரோனா பாதிப்புக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம் - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறும் உலக நாடுகள், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு வழங்கப்பட்டு வந்த மலேரியாவுக்கான மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்து அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அத்நாம், பல்வேறு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்களின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சர்வதேச நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக டெட்ராஸ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்