9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது

வரும் புதன்கிழமை விண்ணிற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.
9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது
x
9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை, வரும் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்புகிறது. இதற்காக 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அவர்கள் விண்வெளியில் பயன்படுத்தும் ஆடைகளை அணிந்து பார்த்து, ஏதேனும் மாற்றம் செய்ய தேவை உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் சோதித்து பார்த்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றால், கடந்தாண்டு ஆளில்லா முயற்சி வெற்றி பெற்ற நிலையில், இந்தாண்டு இந்த முயற்சியை நாசா மேற்கொண்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு Space Shuttle ஓய்வு பெற்றதை அடுத்து, 9 ஆண்டுக்கு பின்னர், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து 2 விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு நாளை மறுநாள் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. பால்கன் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் இந்த 2 வீரர்கள் 110 நாட்கள் அங்கு தங்கி பணியாற்ற உள்ளனர். புதன்கிழமை மாலை 4.33 மணிக்கு 2 வீரர்களுடன், பால்கன்  ராக்கெட் விண்ணில் பாய்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்