ஹாங்காங் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டம் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம்

ஹாங்காங்கை கட்டுக்குள் கொண்டு வரும் சட்டம் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம் அளித்துள்ளது.
ஹாங்காங் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டம் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம்
x
ஹாங்காங்கை கட்டுக்குள் கொண்டு வரும் சட்டம் குறித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஹாங்காங் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பிற நாடுகளின் தலையீட்டை ஏற்க முடியாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வரும் சட்ட முன்வடிவு மீதான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கி உள்ளது. அடுத்த வாரத்திற்குள் இது சட்டமாகும் நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. பெய்ஜிங்குக்கு எதிரான தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடுதல், சீனாவில் இருந்து பிரிவினை மற்றும் சீனாவுக்கு அடிபணிய மறுத்தால், புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஹாங்காங்கில்  தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள அமைதியான முறையில் ஒன்று கூடல், பேச்சுரிமை ஆகியவற்றுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஒரு நாடு, இரு ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர சீனா முயலுவதாக கூறப்படுகிறது. இதனிடைய​ே​ , இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு அந்நாடு பிரத்யேக முறையில் விளக்கம் அளித்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள தங்களின்  விருப்பத்தை நிறைவு செய்ய, இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், மேலும் இது சீனாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் அந்நாடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் வேறுநாட்டின் தலையீடு எதையும் சீனா பொறுத்துக் கொள்ளாது எனவும் பிற நாடுகளின் தூதர்களிடம், சீன பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்தை கொண்டு வர சீனா தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்