விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.
விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...
x
ஹங்கேரி நாட்டைப் பொறுத்தவரை விலங்குகளை வைத்து வித்தை காட்டும் மிகப் பிரபலமான சர்க்கஸ் நிறுவனம், MAGYAR NEMZETI சர்க்கஸ். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இவர்களின் சர்க்கஸ் காட்சிகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரத்து செய்யப்பட்டுவிட்டன. இன்னும் சுமார் ஆறு மாத காலத்துக்கு சர்க்கஸ் இயங்க முடியாது என்றவுடன் இதன் உரிமையாளர் ஜோஸஃப் ரிச்சர் (Jozsef Richter), ஒரு ஐடியா செய்தார், கார் மூலமாகவே சுற்றிப் பார்க்கக் கூடிய விலங்குக் காட்சி சாலையாக, அதாவது சஃபாரி பார்க்காக இந்த இடத்தை மாற்றிவிட்டார்.

யானை, ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டகச் சிவிங்கி என இங்கே நுற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. டிக்கெட் வாங்கி உள்ளே வரும் மக்கள், காருக்குள் இருந்தபடியே இந்த விலங்குகளோடு பழகலாம். இந்த ஏற்பாடு எங்கள் சர்க்கஸ் நிறுவனத்தை அழிந்துவிடாமல் காக்கிறது என்கிறார் ஜோசஃப். ஆனால், சமூக இடைவெளியோடு எங்கேதான் சுற்றுலா போவது என தவித்துக் கிடந்த ஹங்கேரி மக்களுக்கு இது நல்லதொரு விடையாக அமைந்துவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்