பொழுதே போகவில்லை - ஊரடங்கு அலப்பறைகள்

இந்த ஊரடங்கு சீசனில் சமையல் வீடியோ போட்டு பெருமையடித்துக் கொள்வது இல்லத்தரசிகளுக்கு ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது.
பொழுதே போகவில்லை - ஊரடங்கு அலப்பறைகள்
x
எக்குத்தப்பாய் மாறிய சமையல் வீடியோ...

இந்த ஊரடங்கு சீசனில் சமையல் வீடியோ போட்டு பெருமையடித்துக் கொள்வது இல்லத்தரசிகளுக்கு ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. இந்தப் பெண்ணும் அப்படித்தான் சப்பாத்தி போடுவது எப்படி என சமூக வலைத்தளத்தில் சொல்லிக்கொடுக்க நினைத்தார். ஆனால், சப்பாத்தி மாவை தலையில் போட்டுக்கொள்வது எப்படி என காட்டிவிட்டார்...

கட்டிப்பிடிப்பதற்கு ஏற்ற விசேஷ திரை...

கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என நம் நாட்டில் இப்போதுதான் சொன்னார்கள். ஆனால், ஏற்கெனவே மேலை நாடுகளில் மச்சான் மாமா ரேஞ்சுக்கு கொரோனாவோடு பழக ஆரம்பித்துவிட்டார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த Cauvin எனும் இந்த மனிதர், தன் பாட்டியை சமூக இடைவெளியோடு கட்டிப் பிடிப்பதற்காகவே ஒரு பாதுகாப்பு திரையை வடிவமைத்திருக்கிறார்.

அம்மாவை கட்டிப் பிடிக்க சிறப்பு உடை...

கிட்டத்தட்ட இதே மாதிரி, ஒரு பெண் தன் அம்மாவை கட்டிப் பிடிப்பதற்காகவே நீர்யானை போன்ற ஒரு உடையை உருவாக்கியிருக்கிறார். இது வெறும் ஃபேஷன் டிரஸ் மட்டுமல்ல... கொஞ்சம் கூட கிருமிகளை உள்ளே அனுமதிக்காத சமூக விலகல் உடையும் கூட!

Next Story

மேலும் செய்திகள்