கொரோனா கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆகலாம்" உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டுவர இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆகலாம் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
x
கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டுவர இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெனிவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர கால நிபுணர் டாக்டர் மைக் ரயான், புதிய கொரோனா பரவல் பகுதிகளை கண்டறியாமல் உலக நாடுகள், கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்தார். இதனிடையே ஆப்கானில் மகப்பேறு மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கண்டனம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்