உலகம் முழுவதும் 47,07,984 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் 47 லட்சத்து 7 ஆயிரத்து 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 47,07,984 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
213 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 944 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை 18 லட்சத்து 3 ஆயிரத்து 237 பேர் குணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 லட்சத்து 92 ஆயிரத்து 803 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்தம் 15 லட்சத்து 3 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில்  940 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளிலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்