பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா
பிரேசிலில் ஊரடங்கை அதிபர் தளர்வு படுத்தியதால் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரேசிலில் ஊரடங்கை அதிபர் தளர்வு படுத்தியதால் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் பதவியை ராஜினாமா செய்தார். பிரேசிலில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டிய நிலையில், ஊரடங்கை அதிபர் Bolsonaro தளர்வுப்படுத்தி, ஜிம், பியூட்டி பார்லர்களை திறக்க உத்தரவிட்டார். மேலும் நோய்க்கு தீர்வான மருந்து என உறுதிப்படுத்தப்படாத மாத்திரையை மக்களுக்கு வழங்க அதிபர் அறிவுறுத்தினார். இதனால் அதிபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரேசிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

