இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்குவோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்குவோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
x
இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, தனக்கு மிகவும் நல்ல நண்பர். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்