கையேந்தி நிற்கும் உலகின் மிக உயரமான கட்டிடம் - வெளிப்புற விளக்குகள் அனைத்தும் விற்பனை..?
பதிவு : மே 13, 2020, 10:18 AM
உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குரிய புர்ஜ் கலிஃபா, தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது மக்களிடம் கையேந்தி தானம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
* உலகின் மிக பணக்கார நாடுகளில் ஒன்றாக எப்போதும் மதிக்கப்படுவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அந்த நாட்டின் செல்வச் செழிப்புக்கு அத்தாட்சியாய் விளங்குவது துபாய் நகரம்.

* துபாய் நகரத்துக்கே பெருமை என்றால் அது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாதான். 

* இதன் உயரம் 828 மீட்டர். விமானத்தில் இருந்து குதிப்பது போல இந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து சாகசம் எல்லாம் செய்வார்கள். அந்த அளவுக்கு இது உயரமானது.

* இத்தனை பெருமைகள் கொண்ட இந்தக் கட்டிடம், உலகின் மிக உயரமான தானம் கேட்கும் பெட்டி... அதாவது Worlds Tallest Donation Box என்ற நிலைக்கு சமீபத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. 

* கொரோனா வைரஸ்தாக்குதல் துபாய் நகரத்தை தலைகீழாக மாற்றிப் போட்டதன் விளைவுதான் இது. உலகின் மிகப் பணக்கார நகரமான துபாயில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எக்கச்சக்கம் இருக்கிறார்கள். 

* ஊரடங்கால் வேலை இழந்த அவர்கள், பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் புர்ஜ் கலிபா ஒரு டொனேஷன் பாக்ஸாக மாற்றப்பட்டிருக்கிறது. 

* இந்தக் கட்டிடத்தின் வெளிப்புரத்தில் சுமார் 12 லட்சம் அலங்கார மின் விளக்குகள் உள்ளன. ஒரு விளக்கு சுமார் 200 ரூபாய் என்ற விகிதத்தில் இந்த விளக்குகள் அனைத்தும் விற்கப்படும் என அறிவிப்பு வெளியானது. உடனே உலகெங்கும் இருந்து பல பேர் இணையம் மூலமாக அத்தனை விளக்கையும் வாங்கிவிட்டார்கள். 

* இந்தப் பணத்தின் மூலம் 12 லட்சம் பேருக்கு ஒரு நாள் உணவு வழங்க முடியும் என துபாய் நகர அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். விளக்குகள் விற்கப்பட்டாலும் அவற்றை கழற்றி எடுத்துவிட மாட்டார்கள் விற்பனை என்பது ஒரு அடையாளத்துக்குத்தான். 

* பணம் போட்டு வாங்கியவர்களின் சார்பில் இந்த உயரமான கட்டிடத்தின் விளக்குகள் வழக்கம் போல ஒளி வீசிக் கொண்டிருக்கும். 

* இப்படியொரு நல்ல காரியத்தை செய்ததன் மூலமாக உலக மக்கள் நெஞ்சில் புர்ஜ் கலிஃபா, இன்னும் கொஞ்சம் உயரமாக நிமிர்ந்து நிற்கிறது.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2322 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1169 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

281 views

பிற செய்திகள்

அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

10 views

"தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது" - அமெரிக்கா

தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

141 views

விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கெல் ரயான் தெரிவித்துள்ளார்.

31 views

"வைரசை கட்டுப்படுத்த முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்" - ஆளுநரை பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.

184 views

கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

512 views

இந்தியாவில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்...

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டிற்குள் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.