வறுமையை மூடி மறைக்கிறதா அமெரிக்கா? - கொரோனாவால் பாடம் படித்த அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்காவின் வறுமையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது, கொரோனா....
வறுமையை மூடி மறைக்கிறதா அமெரிக்கா? - கொரோனாவால் பாடம் படித்த அமெரிக்கா
x
கொரோனாவை விரட்ட உலகமே போராடி கொண்டிருக்க,அமெரிக்கர்கள் மட்டும் துப்பாக்கிகளை வாங்கி குவித்து வருகின்றனர்

கொரோனா பாதிப்பால் தங்கள் உடமைகள் எந்நேரமும் சூறையாடப்படலாம் என்பதால் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கிகளை வாங்கி வருவதாக அவர்கள் கூறும் காரணம் நம்மை அதிர்ச்சியடை வைக்கிறது..

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 லட்சம் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக 
கூறப்படுகிறது...

இத்தனைக்கு உலகிலேயே அதிக மக்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நாடு என்றால் அது அமெரிக்கா தான்...

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, சுமார் 21 லட்சம் அமெரிக்கர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

பல நாடுகளில் இன்று மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் ஆயிரத்து 4 பேர் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவையும் வறுமை விட்டு வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்...

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 160 லட்சம் அமெரிக்கர்கள், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவித்தொகையை பெற விண்ணப்பித்துள்ளனர். 

வளர்ந்த நாடான அமெரிக்காவில் இன்றும் 11 புள்ளி 8 சதவீத குழந்தைகள் வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் கறுப்பின அமெரிக்கர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

சாதாரண தலைவலி என்றால் கூட மருத்துவமனை செல்ல அஞ்சுகிறார்கள், அமெரிக்கர்கள். ஏறக்குறைய மூன்று கோடி அமெரிக்கர்களுக்கு முறையான சுகாதார காப்பீடு இல்லை..

வானை முட்டும் கட்டிடங்கள் நிறைந்த நாட்டில் ஆயிரம் பேருக்கு 2.6 சதவீத மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரம் பேருக்கு 2.9 படுக்கை வசதிகள் என்ற விகிதமே உள்ளது.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின் பிரசவ கால மரணங்கள் பல மடங்கு குறைந்திருந்தாலும் ஈரான், சவுதி அரேபியாவை விட அமெரிக்காவின் பேறுகால உயிரிழப்பு விகிதம் அதிகம்.

காரணம் அனைத்தையும் வணிகமாக பார்க்கும் அமெரிக்கா மருத்துவ கட்டமைப்பு வசதிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. நாட்டின் 21% சதவீத மருத்துவமனைகள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை.

உலகின் பணக்கார நாடுகளில் உள்ள 11 சுகாதார அமைப்புகளைப் பற்றிய சமீபத்திய ஆய்வில், அமெரிக்கா பிடித்திருப்பதோ கடைசி இடம். 

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உலகில் 81 வது இடத்தில் உள்ளது,அமெரிக்கா. வியாட்நாம்,அல்பெனியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட அமெரிக்காவில் கொடுக்கப்படுவது இல்லை 

உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட உலகின் சிறந்த கல்வி முறையை கொண்ட டாப் பத்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா இல்லை. 

அமெரிக்காவின் சொத்து மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு 5 சதவீத பணக்காரர்களை சார்ந்துள்ளது. 

தனது ராணுவம் பலம், வர்த்தகம், வணிகம், 
மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார அடிப்படையில் அமெரிக்காவை  வல்லரசு நாடு என்று கூறினாலும், சுகாதாரம் மற்றும் கல்வி நெருக்கடிகள் தீர்க்கப்பட்டிருந்தால்,இன்று கொரோனாவுக்கு எதிராக போராடும் நிலை 
அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. 

Next Story

மேலும் செய்திகள்