கொரோனா தாக்கம் - உலக நாடுகளின் தற்போதைய நிலை

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கொரோனா தாக்கம் - உலக நாடுகளின் தற்போதைய நிலை
x
* அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

* உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

* கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் கூட்டம் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் உடல்களை புதைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் , உறவுகளின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டு உள்ளது.

* சீனாவின் யுகான் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. யுகானில் போக்குவரத்து சேவை அனைத்தும்  தொடங்கி உள்ளன. முன்னதாக அங்கு கொரோனா தாக்கம் அதிகரித்த போது , பயன்பாட்டிற்கு வந்த செயலியை பயன்படுத்தி மக்கள் யுகானை விட்டு சொந்த ஊர் செல்கின்றனர். இந்நிலையில் அங்கு சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் , மக்கள் அச்சத்தில் உள்ளனர்

* கொரோனா பாதிப்பில் இருந்து இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்ஸன் குணமடைய வேண்டி அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்தநிலையில், போரிஸ் ஜான்ஸனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதால் மக்கள் நிம்மதி
அடைந்துள்ளனர்..

* ஜப்பானில் டோக்கியோ உள்பட 5 மாகாணங்களில் பிதாமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானில் அதிகரித்து வருவதால் பிதாமர் ஷின்சோ இந்த அவசர நிலையை பிரகடனம் அறிவித்து உள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப மாகாண அதிகாரிகள் முக்கிய முடிவுகள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

* தென் கொரியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில், அந்நாட்டு அரசாங்கம் கொரோனா தடுப்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது..

* வட கொரியாவில் மருத்துவர்கள், மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு, தேன் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா தாக்கம் குறையும் வரை மது அருந்த வேண்டாம் என கூறியுள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்